Showing posts with label Turkey Film. Show all posts
Showing posts with label Turkey Film. Show all posts

Autumn








1990 களில் கல்லூரி நாட்களில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்றதற்காக பத்தாண்டு சிறை வாசம் பெறுகிறான் யூசூப். நுரையீரல் பாதிக்கப்பட்டதால் உடல் நிலையின் பொருட்டு விடுதலையாகிறான்.



சிறையில் இருக்கும் போது தந்தையும் இறந்து விடவே, தன்னையே எண்ணி வாடி இருக்கும் தாயுடன் வந்து சேருகிறான். விடுதலையாகி வீடு வந்து சேர்ந்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் யூசுப்பை சந்தித்து பல அறிவுரைகளை வழங்குகின்றனர். பல வித வேலைக்கும் சிபாரிசு செய்கின்றனர். தாயின் உடல் நலம் கருதி எங்கும் செல்ல அவன் மனம் இடமளிக்கவில்லை.



தனது ஒரே நண்பனான மிக்காயிலின் தச்சு பட்டறையில் அவனுக்கு உதவியாய் சில வேலைகளை மட்டும் செய்து சிறிது பணம் சம்பாதிக்கிறான். இருவரும் சேர்ந்து ஆடி பாடி மகிழ்வதும் மலையூச்சிக்கு சென்று இரவுகளை கொண்டாடுவதுமாக பொழுதை கழிக்கிறான்.



கல்லூரி நாட்களில் கணிதத்தில் அதிக ஆர்வமுள்ளவனாய் இருந்ததால் உறவுக்கார சிறுவன் ஒருவனுக்கு கணித பாடங்களை சொல்லி தருகிறான். அவனும் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் அவனுக்கு சைக்கிள் பரிசளிப்பதாகவும் உறுதியளிக்கிறான்.



எதிலும் பற்றவனாக திரிந்து வரும் வேளையில் புத்தக கடையில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவள் பெயர் இகாவை சந்திக்கிறான். அவள் ஜார்ஜியாவிலிருந்து பிழைப்பு தேடி வந்து எந்த வேலையும் கிடைக்காமல் விலை மாதுவாகிவிடுகிறாள். தன் ஒரே நான்கு வயது பெண்ணுக்காக அந்த தொழிலை செய்து பணம் ஈட்டுகிறாள்.


சிறைவாசத்தின் கொடுமைகளையும் அவன் அனுபவித்த வேதனைகளையும் தாயிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான். பல இரவுகள் தூக்கமின்றி அலறி எழும் காட்சி திரைப்படம் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.


இகாவின் நிலையை எண்ணி வருத்தம் கொள்கிறான் யூசுப். இருவரும் நெருங்கி பழகுகின்றனர். என்னதான் மனங்கள் நெருங்கினாலும் வெவ்வேறு தேசத்தவரானதால் இகாவால் துருக்கியில் தங்க முடியவில்லை. அவளின் விசா இன்னும் 15 நாட்களேயுள்ளது. சொல்ல முடியாத வேதனையுடன் யூசுப்பை தன் நாட்டுக்கு வந்து விடுமாறும் அங்கு சென்று இனிமையான வாழ்க்கை வாழ வேண்டுகிறாள். ஆனால் தனக்காக பத்து வருடங்களாக அத்தனை துயரங்களையும் தாங்கி கொண்டு வயது முதிர்ந்த தாயை விட்டு வர முடியாமல் தவிக்கிறான்.



இகாவின் விசா பூர்த்தியாகும் நாளும் நெருங்குகிறது.


அன்று புதிய சைக்கிளுடன் வீடு வந்து சேருகிறான் யூசூப். சிறு வயதில் அவன் ஆசையுடன் வாசிக்கும் பேக்பைப்பர் இசை கருவியை எடுத்து வாசிக்குமாறு தாய் யூசுப்பை வேண்டவே கனவு காண்பது வேண்டுமானால் நமது ஆசையாய் இருக்கலாம் ஆனால் இறைவன் அருளிலிருந்தால் மட்டுமே விரும்பியது கிடைக்கும் இல்லாவிட்டால் கிடைத்ததை விரும்பி ஏற்று கொள்வதே சிறந்தது என்ற பாடலை இசைப்பதாக படம் நிறைவடைகிறது.



இந்த துருக்கி திரைப்படம் மிககுறைவான பாத்திரங்களை கொண்டு படைக்கப்பட்ட அற்புத படைப்பு கண்கள் வியக்கும் ஒளிப்பதிவும் இழையோடி வரும் அற்புத இசையும் கூடுதல் சிறப்பு.



வட துருக்கியின் மலைப்பிரேதசங்களையும் ஒளிப்பதிவான காட்சிகளை விவரிக்க வார்த்தைகளில்லை. கருங்கடலின் சீற்றம் யூசூப் இகாவின் மனதின் ஏற்படும் உள்ள குமுறலாய் குறீயீடாய் சித்தரித்திருப்பது அத்தனை அழகு.


சென்ற ஆண்டு {2008} வெளியாகி விருதுகளை வாரி குவித்துள்ளது.
  • Adana Golden Boll Film Festival, Turkey (2008): Best Film, Best Supporting Female Actor (Megi Kobaladze),


  • Special Jury Prize Locarno Film Festival, Switzerland (2008): The Art and Essay Cicae Prize


  • SIYAD (Turkish Film Critics’ Association) Awards, Turkey: Best Film, Best Script, Best Director, Best Cinematography (Feza Çaldıran), Best Actor (Onur Saylak)


  • Eurasia Film Festival, Antalya, Turkey (2008): Netpac Jury Award


  • Tiblisi Film Festival, Georgia (2008): Silver Prometheus Award


  • Premiers Plans Angers European First Film Festival, France (2008): Soundtrack Award


  • Festival on Wheels, Turkey (2008): Silver Goose and Critics’ Awards


  • Montreal World Film Festival, Canada (2008)


The Winning Team



திரைக்கதை இயக்கம் Ozcan Alper. இஸ்தான்புல் பல்கலைகழகத்தில் வரலாறும் அறிவியலும் பயின்ற இவர் மாற்று சினிமா மீதுள்ள அதீத ஆசையால் சினிமா தொழில் நுட்பம் பயின்றார். பின்னர் சிறு தொலைகாட்சி சீரியல்களை இயக்கினார். இவரது முதல் குறும்படம் Momi (Grandmother) இவரது சொந்த மண்ணின் மொழியான ஹெம்சின் மொழியில் உருவாக்கப்பட்ட முதல் படம். இவையெல்லாவற்றையும் விட தனி சிறப்பு இது இவரது முதல் திரைப்படம்.

கிம் கிடக்கின் Spring, Summer, Fall, Winter... and Spring போலவே இயற்கையின் பருவங்களை ஒளிப்பதிவின் மூலமும் குறீயீடுகள் மூலமும் கதை சொல்லியிருக்கிறார் என்று பாராட்டுகிறது லண்டனிலிருந்து வெளியாகும் ஸ்கீரின் டெய்லி பத்திரிகை. Autumn பருவ காலத்தை இதில் அழகாக சொல்லிவிட்டார் என்றும் இந்த இளம் இயக்குநருக்கு மகுடம் சூட்டுகிறது.

ஒளிப்பதிவு Feza Çaldiran. இவரை எத்தனை பாராட்டினாலும் தகும் என்பதை டிரைலர் பார்த்ததும் புரிந்து கொள்வீர்கள்.



சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.



டிரைலரை உடனே பாருங்கள்.


டிஸ்கி: பதிவையும் படித்து விட்டு டிரைலரையும் பார்த்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்றால் அடுத்த பதிவு ஆகஸ்ட் 15 தான். அப்புறம் உங்க இஷ்டம்.





"Uc Maymun" (Three Monkeys)










பேரே சற்று வித்தியாசமாக இருக்கும் இத்திரைப்படம் யூப் அவனது மனைவி ஹேசர் மற்றும் அவர்களது பதின்ம வயது மகன் இஸ்மாயில் பற்றிய துருக்கி திரைப்படம்.


இந்த மூவரின வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்களால் என்ன நடக்கிறது என்பதே அழகாகவும் அற்புதமாகவும் சித்தரிக்கப்பட்ட எளிய திரைப்ப்டம்.


சர்வட் என்ற ஒரு உள்ளூர் அரசியல்வாதியின் காரோட்டியாக பணிபுரிகிறான் யூப்.


சர்வட் ஒரு நடுஇரவில் காரோட்டும் போது விபத்தாகி இறக்கிறாள் ஒரு பெண். முதலாளியின் அறிவுறுத்தலின் பேரில் அதற்கு பொறுப்பேற்று சிறை செல்கிறான் யூப்.


யூப் சிறை சென்றாலும் அவனது மாதச்சம்பளத்தை குடும்பத்திற்கு அளிப்பதாகவும் விடுதலையாகும் போது பெரும் தொகை தருவதாகவும் வாக்குறுதி அளிக்கிறான் சர்வட் .


மாத்ந்தோறும் தொகையை பெறுவதற்காக சர்வட்டிடம் செல்கிறாள் ஹேசர். இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கின்றனர்.


தந்தை அருகில் இல்லாத தைரியத்தில் எந்த பொறுப்பும் இல்லாமல் நண்பர்களுடன் குடிப்பதும் ஊர் சுற்றுவதுமாய் திரிகிறான் இஸ்மாயில்.



சர்வட் ஹேசர் உறவுகள் எல்லை மீறுகின்றன. இச்சந்தர்பத்தை பயன் படுத்தி அவனிடமிருந்து சிறிது சிறிதாக பண்த்தையும் கற்க்கிறாள் ஹேசர்.



மகனுக்கு ஒரு கார் வாங்கி பரிசளிக்கிறாள். திடிரென பணவரவால் சந்தேகம் கொள்கிறான் இஸ்மாயில்.
சற்றும் நம்ப முடியாத ஒரு தருணத்தில் இருவரது உறவுகளையும் அறிந்து விடுகிறான் இஸ்மாயில்.



பதின்ம வயதானதால் சொல்ல முடியாத வேதனையில் தவிக்கிறான். இத்தருணத்தில் யூப் விடுதலையாகிறான்.. தன்னை அழைத்து செல்ல காரோட்டி வந்த மகனிடம் பணவரவுக்கான
காரணத்தை கேட்கிறான். பதில் கூற முடியாமல் திணறுகிறான் இஸ்மாயில்.



ஹேசரின் மனதில் ஏதோ மாற்றம் இருப்பதாக யூகிக்கிறான் யூப். கணவன் மனைவி இடையே
மனஸ்தாபங்களும் வாக்குவாதமும் வலுக்கிறது.



யூப் பெரும்பாலும் வீட்டில் இருக்காமல் ஒரு சிற்றுண்டி விடுதியில் வேலை செய்யும் உறவுகள்ற்ற ஒரு விடுதி சிப்பந்தியோடு பொழுதை கழிக்கிறான். யூப் செய்யும் உதவிகளுக்காக அவன் பெரும் கடைமை பட்டிருப்பதாயும் அவனுக்காக எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாயும் கூறுகிறான்.



ஹேசர் தனிமையில் சந்திந்து சர்வட்டிடம் முறையிடுகிறாள். சர்வட்டும் நடந்தவைகளையெல்லாம் மறந்து விட்டு தன்னை விட்டு விலகும் படி கோபப்படுகிறான். ஹேசர் மறுக்கிறாள்.



இக்கட்டான தருணத்தில் முதலாளி சர்வட் கொலை செய்ய படுகிறார். தானே இக்கொலையை செய்ததாக பெற்றோரிடம் கூறுகிறான் இஸ்மாயில்.



எல்லாவற்றையும் தான் பார்த்து கொள்வதாயும் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறி மகனை சமாதான படுத்துகிறான் யூப்.


ஒவ்வொருவரும் தத்த்ம் நிலையை எண்ணி வருந்துவதாக முடிகிறது THREE MONKEYS.


இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவும் எடிட்ங்கும் மிக்ப்பெரிய பலம்.


முதல் காட்சியியே {opening shot } மிரள வைக்கும் வித்ததில் ஒளிப்பதிவு.
ஒளிப்பதிவு இயக்குநர் Gokhan Tiryaki. மிக மிக வித்தியாசமான காட்சி அமைப்புகள்.



அருமையான எடிட்டிங். கொலை செய்ததது யார் என யூகிக்க முடியாமல் சில காட்சிகள் திகிலடைய செய்கிறது. மூவர் இத்திரைப்படத்திற்கு குழுவாக எடிட் செய்துள்ளனர்.



இயக்கம்: Nuri Bilge Ceylan. இதுவரை முப்பதைந்திற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியவர்.


கேன்ஸ் திரைப்படவிழாவிலும் இன்னும் பல விழாக்களிலும் பரிசு பெற்ற திரைப்படம்.



தமிழில் இது போன்ற "குரங்குகள்" எப்போது...????

 

©2009 butterfly Surya | by TNB