Pursuit of Happyness : உண்மை தழுவிய கதை. அதாவது True story என்பார்கள். Hollywood'ன் success formula இது. Will Smith தயாரித்தது மற்றும் நடித்தது. அமெரிக்காவில் எல்லாரும் பணக்காரன், ஏழையே கிடையாது.. என்று நினைப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். நமக்கு பழகிய இந்திய மத்தியதர வாழ்க்கை. ஆனால் கதை நடப்பது San Francisco. அவ்வளவே தான் வித்தியாசம். சராசரி சினிமா ரசிகனுக்கு தெரிந்த Hollywood படங்களில் இருந்து இது பல காணி தூரம் தள்ளியே இருக்கிறது. பல தரப்பில் ரசிக்கபட்ட ஒரு படம் இது.
Will Smith ன் மிக அற்புதமான நடிப்பு.. Sales Calls க்காக ஒவ்வொரு முறையும் ஒடும் போது பார்ப்பவர் நமக்கே மூச்சு இறைக்கும். அவர் மகனான சிறுவன் கேள்விகளை கேட்கும் போதெல்லாம் பொறுமையாக பதில் சொல்வது கவிதை.
குறிப்பாக இரவு தங்க இடமெல்லாமல் கழிவறையில் தங்கும் காட்சிகள் கண்களை குளமாக்கும்..
