



இது வரை விடுவிக்க முடியாத கணித புதிரை கண்டுபிடிக்க நான்கு கணித மேதைகளை ஒரிடத்திற்கு வருமாறு அழைப்பு வருகிறது. Condition: யாரும் மொபைல் போன் மட்டும் எடுத்து வரக்கூடாது.
அழைத்தவர் Mr. Fermat.
தங்களுக்குள் முன்பின் அறிமுகமில்லாத அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புனை பெயர்கள் Hilbert, Pascal, Galois and Oliva.
நிகழ போகும் அதி பயங்கரம் அறியாது நால்வரும் சொன்ன இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.
நகரித்திலிருந்து வெகு தூரம் கடந்த ஒரு ஏரியை ஒட்டிய காலியான பிரும்மாண்ட பங்களா.
அதில் ஒரு அழகான அறை. அனைவரும் காத்திருக்கின்றனர். Fermat வருகிறார். அனைவருக்கும் விருந்தும் அளிக்கிறார்.
Fermat ன் மொபைல் அடிக்கிறது. அவரது மகள் மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்று சொல்லி போன் பாதியிலேயே கட்டாகி விட ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவதாக சொல்லி கிளம்புகிறார் Fermat.
அவர் சென்றதும் விபரீதம் ஆரம்பிக்கிறது.
அங்குள்ள PDA வில் கணக்கு புதிர் வருகிறது. ஒரு நிமிடத்திற்குள் அதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும். விடையளிக்க தவறினாலும் தவறான விடையளித்தாலும் அறை நாலா பக்கத்திலிருந்தும் நகர ஆரம்பிக்கும்.
அவசரமாய் போன Fermat வருவதாய் காணோம்.
புதிர்கள் மட்டும் வந்து கொண்டே இருக்க நால்வரும் சிக்கி திணருகிறார்கள். விடையளிக்க முடியாவிட்டல் அறைக்குள்ளேயே மாட்டி கொண்டு இறக்க வேண்டியதுதான்.
இதையெல்லாம் செய்தது யாராக இருக்கும்..??????
ஏன் சென்றவர் வரவில்லை..??????
ஏன் புனைப்பெயர் அளிக்கப்பட்டது..??????
கண்டிஷன் போட்டதன் நோக்கமென்ன..???????
நால்வரும் தப்பித்தார்களா ..??????
கண்டிப்பாக திரைப்படத்தை பார்க்க வேண்டும். சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகளுக்கு சரியான விருந்து.
இப்படத்தை எழுதி இயக்கியவர்கள் இரட்டையர்களான Luis Piedrahita & Rodrigo Sopena. அற்புதமான ஒளிப்பதிவும் மிரட்டும் இசையும் கூடுதல் சிறப்பு.
காலம்: 90 நிமிடங்கள் மட்டுமே
வெளிவந்தது: 2007
மொழி: ஸ்பானிஷ்.
உடனடியாக படத்தை பார்க்க முடியாதவர்களுக்கு டிரைலர் இங்கே.
டிஸ்கி: மேலே உள்ள படங்களில் Fermat இல்லை. டிரைலரில் தான் இருக்கிறார்


