அளவற்ற அன்பும் நண்பர்களிடம் மிகுந்த நட்பும் கொண்டவள் ஜேன்.
தோழிகளின் திருமணத்தை விமர்சையாக்கும் விதமாக பல வகை ஏற்பாடுகளையும் சுய ஆர்வத்தோடு செய்வதை வழக்கமாக கொண்டவள்.
இதுவரை 27 தோழிகளின் திருமணத்தில் பங்கெடுத்த்து
நற்பெயரை பெற்றவள். ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒவ்வொரு விதமான உடைகளை தேர்ந்தெடுத்து அந்தந்த பாரம்பரியத்தோடு தைத்து அவைகளை அணிந்து திருமணத்திற்கு பணிவிடை செய்வதோடு அனைத்தையும் குறிப்பெடுத்து தனது டைரியில் எழுதி வைக்கிறாள்.
அவளின் முதலாளியான ஜார்ஜ் மீது ஒரு தலை காதலை கொண்டவள். அவனோடு தனது எல்லாவிதமான விருப்பங்களோடும் விதவிதமான ஏற்பாடுகளோடும் திருமணம் நடை பெற வேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வருகிறாள்.
28 வது உடையாக ஜார்ஜோடு திருமணம் என்ற கனவு நனவானதா என்பதே ரசனை மிகுந்த 27 Dresses திரைப்படம். A Simple theme entertainment movie. வெளிவந்தது 2008.
ஒரே நாளில் இரண்டு திருமணவிழாக்களில் பங்கெடுத்த களைப்பால் ஜேன் எழுதி வைத்துள்ள டைரியை தவற விட்டு விடுகிறாள். அதை கெவின் என்ற பத்திரிகையாளன் ( Freelance Journalist ) கண்டெடுக்கிறான். அந்த டைரியில் அவளுக்குள்ள வினோத திருமண பங்கெடுப்புகளை அறிந்து அவள் மேல் காதல் கொள்கிறான்.
இதற்கிடையே அவளுடன் சில நாட்கள் தங்குவதற்காக ஜேனின் தங்கை டெஸ் வருகிறாள். ஒரு பார்டிக்கு அழைத்து செல்லும் போது அவளது தங்கை அவளது முதலாளியான ஜார்ஜை விரும்புகிறாள்.
அது தவிர ஜார்ஜை கவர்வதற்காக டெஸ் பல விதமான பொய்களை கூறி அவனை தன் வசப்படுத்திவிடுகிறாள்.

இதை அறியாத ஜேன் தன் தங்கைக்கும் ஜார்ஜ்க்கும் திருமண ஏற்பாடுகளை தானே செய்கிறாள்.
தனது தங்கையின் நேர்மையின்மையால் ஜேன் மிகுந்த மன வருத்தம் அடைகிறாள். ஒரு சந்தர்பத்தில் சகோதரிகள் இருவரும் சண்டையிடவே நேர்மை தவறிய டெஸ் கூறிய பொய்களை போட்டு உடைக்கிறாள். ஜார்ஜ் டெஸ் திருமணம் தடை படுகிறது.
இறுதியில் தன்னை மிகவும் நேசித்த கெவினை மணக்கிறாள். சுபம்.
ஜேனின் திருமணத்திற்கு அவள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பங்கெடுத்த 27 மணமக்களும் அந்தந்த உடையணிந்து ஜேனுக்கு நன்றியை செலுத்துவது அத்தனை அழகு.
டெஸ் தனது நேர்மையின்மையை உணர்ந்து இனி உண்மையாக நடக்க விரும்பி தனக்கு ஏற்ற துணைக்காக காத்திருக்கிறாள்.
30 வயது ஆன ஜேனாக நடித்த Katherine Heigl நடிப்பு அருமை. நடிப்பில் மட்டுமல்லாது கதையாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முகம் திறமை கொண்டவர். பல விருதுகளை அள்ளி சென்றவர்.
இத்திரைப்படத்தின் இயக்கம் Anne Fletcher என்ற பெண் என்பதும் இவரும் நடனம் தொடங்கி பன்முகம் திறமை கொண்டவர் என்பதும் கூடுதல் சிறப்பு.
பொழுது போக்காக பார்க்கலாம்.
A simple entertainment movie.