

Wayne Szalinski என்ற குறும்பு விஞ்ஞானி ஒருவர் செய்யும் விஷபரிட்சைகளால் குழந்தைகள் சுறுங்கி எறும்பை விட சிறியதாய் உருமாறி விடுவதே Honey, I Shrunk the Kids. வெளி வந்தது 1989.
பொருட்களை மிக சிறியதாய் உருமாறும் செய்யும் ஒரு நவீன கண்டுபிடிக்கிறார் Wayne Szalinski. ஏதோ காரணத்தால் அந்த கருவி சரியாக வேலை செய்யவில்லை. அதற்கான தீவிர முயற்ச்சியில் இருக்கிறார் விஞ்ஞானி.
பேஸ்பால் விளையாடி கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவர்கள் பந்தை எடுப்பதற்காக விஞ்ஞானி வீட்டிற்கு வருகிறார்கள். வேலை செய்ய இயலாமல் இருந்த அந்த கருவி திடீரென வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
வந்தது விபரீதம். கால் அங்குலத்திற்கு குழந்தைகள் உருமாறி விடுகிறார்கள்.
இது தெரியாத விஞ்ஞானி அவர்களை வீட்டை சுத்தம் செய்யும் போது குப்பைகளுடன் சேர்த்து வீசி விடவே அவர்கள் தப்பித்து எப்படி வீடு வந்து சேர்வதுடன் பழைய உருவை பெறுகிறார்கள் என்பதே கதை.
முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படம். சிறிய உருவத்துடன் அவர்கள் செய்யும் லூட்டிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அற்புத விஞ்ஞானம் கலந்த நகைச்சுவை திரைப்படம்.
