Showing posts with label Penélope Cruz. Show all posts
Showing posts with label Penélope Cruz. Show all posts

Women on Top

Not For Kids
(கண்ணுங்களா சமத்தா போய் சுட்டி டிவி பாருங்க)






Opening Shot: ------ She is on Top அவளுக்கு அதுதான் பிடிக்கும். அவனுக்கோ திருப்தியில்லை. அவள் லேசாக கண்ணயர்ந்தது விட்டு விழித்து பார்க்கிறாள்.திடீரென கணவனை காணவில்லை. பால்கனி சுவரேறி குதித்து பக்கத்து பிளாட் பெண்ணொருத்தியுடன் டமால்.. (Emotional Accident)

TagLine: இசமெல்லாவும் அவளது கணவன் டோனினோவும் பிரேசில் ஒரு சிறிய ஒட்டலை நடத்துகிறார்கள். இசபெல்லா நளபாகம் தெரிந்தவள். அவளது விதவிதமான மீன் வகை உணவிற்காகவே கூட்டம் அலை மோதும். EA க்கு பிறகு கணவன் மனைவிக்குமிடையே நடக்கும் ஈகோ போராட்டத்தின் நகைச்சுவை கலந்த மசாலா திரைப்படம் தான் women on top .
சரி கதைக்கு வருவோம்.

Plot Summary: கணவனுடன் கோபித்து கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் San Francisco விற்கு வண்டி ஏறிவிடுகிறாள்.

சிறு வயது தோழி மோனிகாவை சந்தித்து நட்ந்ததையெல்லாம் கூறி
எவ்வளவோ நம்பினேன்.. இப்படி பண்ணிட்டானே... இனி அந்தாளு மூஞ்சியை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன் என்று கடல் அன்னை மீது சத்தியம் செய்கிறாள்.

உன் கையிலதான் தொழிலிருக்கே எப்படியும் பிழைச்சிக்கலாண்டி !!! கவலைய விடு !!! என்று தோழியும் ஆறுதல் சொல்ல இசபெல்லாவிற்கு தன்னம்பிக்கை கூடுகிறது.

சென்ற வருடம் கோடை விடுமுறைக்காக பிரேசில் வந்திருந்த ஒரு ஸ்டார் ஒட்டலின் தலைமை சமையல் கலை வல்லுநரை போய் பார்த்து ஏதாவது வேலை கிடைக்குமா ..?? என்று கேட்கிறாள்.

ஸ்டார் ஒட்டலாச்சே எடுத்தவுடன் சமையல் வேலை தர இயலாதென்றும் புதிதாக துவங்கப்பட்டுள்ள, இல்லதரசி/ சமையல் விருப்பமுள்ளவர்களுக்கான சமையல் கற்பிக்கும் பயிற்ச்சி செய்ய முடியுமா என்றும் கேட்கவே சந்தோஷத்துடன் ஒப்பு கொள்கிறாள். வித விதமான உணவு வகைகளை துடிப்புடன் சொல்லி கொடுக்கிறாள். ஊரெங்கும் இசபெல்லாவின் சமையல் பயிற்ச்சி பற்றியே பேச்சு.

அவளது அழகில் மயங்கி பின்னாலேயே நடந்து வந்து பயிற்ச்சியில் சேருகிறான் Cliff. அவன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளன்..

இசபெல்லாவின் சமையல் கலையை நிகழ்ச்சியாக தயாரித்தால் சூப்பராக இருக்கும் என்று Cliff நிலையத்திடம் தெரிவிக்க பல யோசனைகளுக்கு பிறகு அவர்களும் ஒப்பு கொள்கிறார்கள்.

Cliff பல வகைகளில் போராடி இசபெல்லாவையும் சம்மதிக்க வைக்கிறான். நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது.

நேரலையாகவும் ஒளிப்பரப்படுகிறது மெட்டி ஒலி, கோலங்கள் ரேஞ்சுக்கு பிரைம் டைம் நிகழ்ச்சியாக உருவெடுக்கிறது.

San Francisco நகரெங்கும் அஞ்சா நெஞ்சனே வியந்து போகும் அளவிற்கு பெரிய பெரிய கட் அவுட்டுகள் வைத்து விளம்பரபடுத்தி இசபெல்லாவை கவருகிறான் Cliff. ஆனால் இசபெல்லா முடிவெடுக்க தெரியாமல் குழம்புகிறாள். பின்னர் Cliff மெல்ல ஒதுங்குகிறான்.
நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது.


அய்யோ.. டோனினோவை அம்போன்னு விட்டுட்டாமே...என்று உள்ளுற எப்போதும் இசபெல்லாவிற்கு ஒரு குரல் ஒலித்து கொண்டே இருக்கிறது..


Back To Brazil: டோனினோ மனைவியை இழந்து மிகவும் துடிக்கிறான். இசபெல்லா இல்லாததால் ஒட்டல் வியாபாரமும் அம்பேல். கடல் அன்னை (Yemanja வின்) சாபத்தை பெற்று விட்டதாக வருந்துகிறான். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் மோனிகா அனுப்பிய வாழ்த்து அட்டையை கொண்டு அவனும் San Francisco வந்து சேர்கிறான்.


தொலைகாட்சியில் மனைவியின் நேரடி ஒளிபரப்பையும் உடையையும் பார்த்து அதிர்ந்து போகிறான். நிலையத்திற்கு ஒடிப்போய் மன்னிப்பு கோருவதுடன் தன்னுடன் வருமாறு கெஞ்சுகிறான். முதலில் இசபெல்லா மசியவில்லை. டோனினோவின் இசையுடன் நிகழ்ச்சி நடத்தினால் இன்னும் ரேட்டிங் மீட்டர் உயரும் என்று Cliff நினைக்கவே சில நாட்கள் வேண்டா வெறுப்பாக சேர்ந்து நிகழ்ச்சியும் நடத்துகிறாள்.


டோனினோ தன் தவறை உணர்ந்ததாக எண்ணி தினமும் மன்றாடுகிறான். மெல்ல மெல்ல அவளது மனம் மாறுகிறது.. Yemanja விற்கு செலுத்த வேண்டிய நேத்தி கடனை செவ்வனே செய்து முடித்து இருவரும் இணைகின்றனர். சுபம்....


The Cast: Penelope Cruz, Murilo Benicio, Mark Feuerstein மற்றும் பலர்.
தோழி மோனிகாவாக நடித்திருப்பது Harold Perrineau என்ற ஆண் என்பது கூடுதல் செய்தி. கறுப்பின பெண்ணாக அவர் செய்யும் சேஷ்டைகள் நல்ல நகைச்சுவை.

Release: Sep' 2000


Direction: Fina Torres. இவரும் ஒரு பெண்தான். இவர் தன் முதல் படமான Oriana என்ற திரைப்படத்திற்கு கேன்ஸ் விருது பெற்றவர். இந்த படத்தையும் தேடி வருகிறேன். பார்த்தால் பதிவிடுகிறேன்.

All About My Mother

















Todo sobre mi madre { All About My Mother }

ஸ்பெயினில் வாழும் ஒரு சில குடும்பங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பே இந்த திரைப்படம்.

தாயின் பெருமைகளை சார்ந்து எடுக்கப்ப்ட்டதாலும் ஒரு மகனை மையப்ப்டுத்தியதாலும் திரைப்பட பெயர் All about my mother.

Barcelona To Madrid:

ஒரு காமுகனால் கைவிடப்பட்டு கருவை சுமந்து பயணமாகிறாள் மேனுலா.
17 வருடங்கள் கணவனை மறந்து அவன் விபரங்களை மறைத்து தன் அன்பு மகனுடன் ஸ்டீபனுடன் மேட்ரிட் நகரில் வசித்து வருகிறாள்.


உடல் உறுப்புகளை தானம் செய்யும் உறவினர்களிடம் அதன் அவசியத்தையும் அவற்றின் பயன்களையும் எடுத்து சொல்வதே அவள் வேலை. {co-ordinator Donor organ transplants}


ஸ்டிபனுக்கோ மிகப்பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பதே லட்சியம். அதற்காக வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் அனுபவங்களையும் குறிப்பெடுத்து கவிதையாக கதைகளாக வேண்டும் என தீராத ஆர்வத்துடன் இருக்கிறான்.


பார்சிலோனாவிலிருந்து வந்திருந்து நடைபெற்று கொண்டிருக்கும் நாடகத்தை காண ஆவலுடன் இருக்கிறார்கள் இருவரும்.


ஸ்டிபனின்17வயது பிறந்தநாளில் தாயும் மகனும் அவள் தனது இளவயதில் பாத்திரமேற்று நடித்த நாடகத்தை பார்க்க செல்கிறார்கள்.


நாடகம் முடிந்ததும் ஆர்வத்தாலும் பிறந்த நாள் சந்தோஷத்தாலும் ஹீமா என்ற நடிகையிடம் ஆட்டோகிராப் வாங்க ஒடும்போது கார்விபத்தில் பலியாகிறான் ஸ்டீபன்.


ஒரே மகனின் திடிர் மரணத்தால் சொல்ல முடியாத வேதனையுடன் அவனது உறுப்புகள் அனைத்தையும் தானமாக கொடுக்க சம்மதிக்கிறாள்.

Back To Barcelona

மகனின் பிரிவால் அவளால் எதுவுமே செய்ய இயலவில்லை. வேலையையும் உதறிவிட்டு வாழ்க்கையே வெறுத்துபோய் தனது கணவனான லோலாவைத் தேடி பார்சிலோனாவுக்கு பயணமாகிறாள் மேனுலா.


தனக்கு மகன் பிறந்ததும் வளர்ந்தும் அவன் திடீரென விபத்தில் இறந்ததும் தெரியாதவன் லோலா.


பார்சிலோனாவில் தனது பழைய தோழி அக்ரடோவை சந்தித்து தான் பட்ட வேதனைகளையும் தனது நிலையையும் கூறுகிறாள். காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் அதுவரை தன்னுடன் தங்கும் படியும் அவளுக்கு வேலை ஏற்பாடு செய்வதாகவும் அவளது கணவனையும் கண்டுபிடித்துவிடலாம் என நம்பிக்கை ஊட்டுகிறாள்ள் தோழி. ஆனால் அக்ரடோ பாலினம் மாறி விபச்சார தொழில் புரிபவள். திருநங்கைகளும் பாலியில் தொழில் புரிபவர்களுமே அவளது துணை. அரைமனதுடன் அவளுடன் தங்க சம்மதித்து வேலை தேடும் முயற்ச்சியில் ஈடுபடுகிறாள்.


அக்ரடோவின் தோழியான ரோஸா. செவிலியும் பாலியல் தொழில் செய்பவர்களுக்கான மறு சீரமைப்பு வாழ்க்கை ஏற்படுத்தும் சேவையும் செய்துவருபவள்.


ரோஸாவை சந்தித்து உதவி கோருகிறாள் இருவரும்.


ரோஸாவின் தந்தை ஞாபக மறதி நோயால் பாதிக்கப்டடவர். எனவே தாயிடம் மேனுலாவின் நிலையை எடுத்து கூறி தந்தையை கவனிக்க அவளது வீட்டிலேயே வேலை ஏற்படுத்தி கொடுக்க முயற்ச்சிக்கிறாள்.


ரோஸாவின் தாய் மறுக்கவும் அவளை இது போன்ற மனிதர்களின் நட்பையும் அவளது சேவையும் அடியோடு வெறுக்கிறாள். தாயின் போக்கை எண்ணி வருந்தி குடும்பத்தை பிரிந்து மேனுலாவுடன் சேர்ந்து வசிக்கிறாள்.


மேட்ரிடில் கடைசியாக மகனுடன் நாடகம் தற்போது பார்சிலினோவில்
நடைபெற்று கொண்டிருக்கிறது. மகனின் பிரிவை எண்ணி தினந்தோறும்
நாடகம் காணச்செல்கிறாள். ஒரு நாள் நாடக நடிகையான ஹீமாவை சந்தித்து நடந்தது அனைத்தையும் கூறவே தன் காரியதரிசியாக
வேலையில் அமர்த்துவதுடன் போதை மருந்துக்கு அடிமையான தனது மகளையும் கண்காணிக்க வேண்டுகிறாள்.







மகளான நினாவுக்கோ மேனுலாவின் வருகையும் அவள் தன்னை கண்காணிப்பதையும் பொறுக்க முடியாமல் நித்தம் சண்டையிடுகிறாள். நினாவை திருத்த தன்னாலான அனைத்து முய்ற்ச்சிகளையும் செய்கிறாள் மேனுலா.


இதற்கிடையில் ரோஸா தான் கருவூற்று இருப்பாதாகவும் அதுமட்டுமல்லாது தனக்கு எய்ட்ஸ் நோய் தாக்கி இருப்பதையும் கூறவே அதிர்ந்து போகிறாள் மேனுலா.


அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ரோஸாவின் கர்பத்திற்கு காரணம் பல பெண்களுடன் தொடர்புடைய தன்னுடைய கணவன் லோலாவேதான் என்பதை எண்ணி மேலும் குழப்பமும் வருத்தமும் அடைகிறாள்.


ரோஸா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து விட்டு எய்ட்ஸ் தீவிரமாகி இறக்கிறாள்.

லோலாவை சந்தித்து அவனின் செய்கைகளையும் அவனுக்கு ஒரு மகன் பிறந்து 17 வயதில் இறந்ததையும் கூறவே தான் செய்த செய்கைகளையெல்லாம் எண்ணி எண்ணி வருந்துகிறான்.


Again To Madrid:

கால மாற்றத்தாலும் தனது வாழ்க்கையில் புதிய வரவான பிஞ்சு குழந்தைக்கு ஸ்டீபன் என்று பெயரை சூட்டி அவனுக்க்காக தான் வாழ வேண்டும் என மன உறுதியோடு Aids Awarness Co ordinator வேலையை ஏற்றுக்கொண்டு மீண்டும் மேட்ரிட் நோக்கி பயணமாகிறாள்.


Visit To Barcelona:

பணி நிமித்தம் காரணமாக இரண்டு வருடம் கழித்து தன் குட்டி மகனுடன் பார்சிலோ செல்லும் மேனுலா அனைவரையும் சந்திக்கிறாள்.


தோழியான அக்ரடோ பாலியல் தொழிலை விட்டுவிட்டு நாடக நடிகை ஹீமாவின் காரியதரிசியாகிறாள். மகளும் நினாவும் போதை பழக்கத்தை விட்டு மணமாகி செட்டில் ஆகிவிட்டதை அறிந்து மகிழ்கிறாள்.



மனநலம் குன்றியவர், பாலியல் தொழில் புரிபவர், பாலினம் மாறியவர், எய்ட்ஸ் நோய் தாக்கியவர், போதைபழக்கத்திற்கு அடிமையானவர் என்று சமூகத்தால் வெறுத்து ஒதுக்ப்படும் பல்வேறு பாத்திரங்களை வைத்து எந்த வித ஆபாசமோ அருவருப்பான காட்சிகளோ இல்லாத ஒரு அற்புத திரைப்படம்.


சாவின் விளிம்பில் இருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தந்தையுடன்வாக்கிங செல்லும் நாய் ரோஸாவை
பார்த்து குதித்து அன்பை வெளிப்படுத்துவதும் ஆனால் தந்தையே மகளை பார்த்து What is your age..?? What is your height ..?? என்று கேட்பது நெகிழ்ச்சியான காட்சிகள்.

ரோஸாவாக நடித்த Penélope Cruz பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. பல உலக விருதுகளை குவித்ததுடன் இந்த வருடம் ஆஸ்கர் அள்ளியவர்.



மேனுலாவாக நடித்த Cecilia Roth மிகச்சிறந்த ஸ்பெயின் நடிகை. பல விருதுகளை பெற்றது மட்டுமல்ல பல உலக விழாக்களில் சிறந்த திரைப்ப்டங்களை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் இருப்பவர்.



இயக்கம் Pedro Almodóvar. இவரை பற்றி ஒரு புத்தகமே போடலாம் போல இருக்கு. யப்பா பதக்க பட்டியல் இங்கே .. பொறுமை இருப்பவர்கள் படிக்கலாம்.


47 உலக விருதுகளுடன் 2000ம் ஆண்டு ஆஸ்கர் வென்றது.


நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.


 

©2009 butterfly Surya | by TNB