





வர்ணிக்க முடியாத அழகுடன் பதினேழு வயது நிரம்பிய மரியா கொலம்பியாவில் வசித்து வருபவள். வயதான தாயும் மரியாவின் சகோதரியும் குழந்தையுடன் வீட்டிலிருக்க குடும்ப ஏழ்மை காரணமாக ரோஜாக்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறாள் மரியா. சகோதரிக்கு குழந்தை பிறந்ததும் அவளை விட்டு விட்டு ஒடி விட்டான் அவளது கணவன். குடும்பச்சுமை முழுவதும் மரியா மீது விழுகிறது.
பதின்ம வயதினளானதால் மரியாவிற்கு ஒரு காதலனும் உண்டு. அவனுடன் நெருங்கியும் பழக ஆரம்பிக்க கர்பவதியாகிறாள். அதனால் வேலையில் சரியாக ஈடுபட முடியவில்லை. முதலாளியிடம் கோவித்து கொண்டு வேலையை விட்டு விடுகிறாள்.
அம்மாவிற்கும் அக்காவிற்கும் மரியா மீது அளவற்ற கோபம். வீட்டு சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை என்று திட்டி தீர்க்கிறார்கள். தன் காதலையும் கர்ப்பத்தையும் சொல்ல முடியாது தவிக்கிறாள் மரியா. வேறு வேலைக்கு எவ்வளவோ முயற்சி செய்தும் எதுவும் கிடைத்தபாடில்லை. காதலனோ பயந்து போகிறான். அவளை திருமணம் செய்யவும் தயங்குகிறான். காதலனுடன் சண்டையிட்டு பிரிந்தும் விடுகிறாள்.
செய்வதறியாது தவிக்கும் வேளையில் காதலனின் நண்பன் ஒருவன் ஒரு வேலை இருப்பதாகவும் ஆனால் அதற்கு நல்ல பணம் கிடைக்கும் என்று கூறுகிறான். சரி என்கிறாள். ஆனால் போதை மருந்தை அமெரிக்காவிற்கு கடத்தும் படு பயங்கரமான வேலை என்று முதலில் அறியாது அப்பாவியாக ஒப்பு கொள்கிறாள் மரியா. அதுவும் எப்படி..? பவுடர்களை ரப்பரில் அடைத்த மாத்திரைகளாக முழுங்க வேண்டும் என்பதே ஏற்பாடு. அதிக ரிஸ்கானதும் கொஞ்சம் தவறினால் உயிருக்கே உலையாகும் என்று அறிந்ததும் முதலில் சற்று பயந்தும் குழம்பியும் போகிறாள்.
குடும்பத்தில் வறுமை..வேலை இல்லை..காதலில் தோல்வி..திருமணமாகவில்லை.. வயிற்றில் குழந்தை.. இவைகளை விட ஒரு பெண்ணுக்கு வேறு என்ன கொடுமைகள் வேண்டும்...???
எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராகிவிட்டாள் மரியா.
பெரிய திராட்சை பழங்களை பல்லில் படாமல் விழுங்கும்படி ரோஸி என்ற பெண் மரியாவிற்கு பயிற்சி அளிக்கிறாள். ரோஸி பல முறை போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவள். அவளது சகோதரி அமெரிக்காவில் வசிப்பவள். அவளை காணும் ஆசையில் ஒரு முறை செல்ல முயற்சி செய்து பின் தன் குற்ற உணர்சியால் சகோதரியை காணாமலே பல முறை சென்றும் வந்து விட்டவள்.
மரியாவுடன் ரோஜா ஏற்றுமதி கம்பெனியில் வேலை பார்த்த பிளான்கா {Blanca} என்ற பெண்ணும் இதே தொழிலில் இறங்க முடிவெடுத்து மரியாவுடன் பயணமாக நினைக்கி. மரியாவிற்கு அவள் வருவது மிகவும் ஆபத்தானது என்று எவ்வளவோ எடுத்து கூறுகிறாள். ஆனால் பிளான்காவோ பணத்திற்கு ஆசைப்பட்டு வந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறாள்.
மரியா இந்த போதை கடத்தலில் அமெரிக்காவின் விமான நிலையத்தில் பிடிபட்டாளா? அவளுடன் கூட வந்த பெண்களுக்கு ஏற்பட்ட நிலை என்ன..? வாழ்வா சாவா என்பதே சொல்ல முடியாத சோகங்களுடன் கூடிய சன்பென்ஸ் நிறைந்த மீதிக்கதை.
விசா, டிக்கெட், தங்குமிடம், பார்க்க வேண்டிய நபர்கள், செய்ய வேண்டிய விஷயங்கள் அனைத்தும் ரெடி என்று ஆர்டர் வருகிறது.
அமெரிக்காவில் காரியதரிசி வேலை கிடைத்து விட்டதாக வீட்டில் கூறி விட்டு 62 மாத்திரைகளை விழுங்கிய படி முதன் முறையாக அமெரிக்காவிற்கு பயணமாகிறாள் மரியா. அவளுக்கு பயிற்சி அளித்த ரோஸியுடனும் பிளான்காவுடனும் விமானத்தில் தயங்கியபடியே பயணமாகிறாள். இவர்கள் மூவர் தவிர இன்னொரு பெண்ணும் அதே விமானத்தில் வருவதாக மரியாவிடம் கூறுகிறாள் பிளான்கா.
விமானத்தில் ரோஸிக்கு உடல் நிலை பாதிக்க படுகிறது. படபடப்பும் அதிகமாகிறது.ஆனால் ஒருவரோடு ஒருவர் பேசி கொள்ள முடியாமல் மூவரும் தவித்து போகின்றனர். இந்த படபடப்பில் தங்க வேண்டிய ஹோட்டலின் முகவரியை தொலைத்து விடுகிறாள் மரியா. ரோஸி ஆவணங்களில் தன் சகோதரியின் முகவரியை குறிப்பிடும் படி கூற விசா பேப்பர்களை மரியா சமர்பிக்கிறாள்.
விமானம் அமெரிக்காவை அடைந்தும் விடுகிறது.விமான நிலையத்தில் அவரவர் பெட்டிகளுக்காக காத்திருக்கும் வேளையில்..
மரியாவை மட்டும் தனியாக இடை மறித்து பெண் காவலர் துணையுடன் ஒரு தனி அறைக்கு அழைத்து செல்கிறார் உயர் போலிஸ் அதிகாரி....
அழைத்து செல்லப்பட்ட மரியாவை பெண் போலிஸ் பரிசோதிக்கிறார். அமெரிக்காவிற்குள் போதை மருந்துகளை கடத்தி வருவது மிகப்பெரிய குற்றம் என்றும் உடலில் ஏதேனும் கடத்தி வந்திருக்கிறாயா..? என்றும் கேள்வி கேட்கிறார்.எதுவும் இல்லை என்று அழுத்தமாக மறுக்கிறாள் மரியா. ஆனால் அவர்களுக்கோ சந்தேகம் தீர்ந்தபாடில்லை.
மரியாவை எக்ஸ்ரே பரிசோதனைக்குள்ளாக்க முடிவு செய்து அவளிடம் ஒப்புதலும் வாங்குகின்றனர். ஆனால் மரியா கர்ப்பமுற்றிருப்பதாக அறிந்ததும் எக்ஸ்ரே பரிசோதனை செய்ய இயலாது என்று கூறி அவளை விடுவிக்கின்றனர். ஆனால் மரியா, ரோஸி, பிளான்கா தவிர விமானத்தில் பயணித்த மற்றொரு பெண் போலிஸில் மாட்டி கொள்கிறாள். அவளை விலங்கிட்டு அழைத்து சென்று விடுகின்றனர். மரியாவை விடுவிதத்து குறித்து அவளுக்கு மகிழ்ச்சி என்றாலும் அந்த பெண்ணை கைவிலங்கிட்டு அழைத்து சென்றது மரியாவை சற்று உலுக்கிவிடுகிறது. பயமும் அதிர்ச்சியும் இருந்தாலும் எதையும் காட்டி கொள்ளாதவளாய் விமான நிலையத்தை விட்டு வெளியேறுகிறாள்.
மரியா, ரோஸி, மற்றும் பிளான்காவிற்காக காத்திருந்த கடத்தல்காரர்கள் இருவர் விமான நிலையத்தில் இருந்து அவர்களை வேகமாக அழைத்து செல்கின்றனர். ரோஸி வயிற்று வலியால் துடிக்கிறாள். மூவரையும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கின்றனர். மரியா, பிளான்காவின் உடல்களிலிருந்து கழிவு மூலம் போதை பொருட்கள் அடைக்கப்பட்ட மாத்திரைகள் எடுக்கப்ப்டுகிறது. ரோஸிக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று மரியா கடத்தல் காரர்களிடம் முறையிடுகிறாள். அவர்கள் எதையும் சட்டை செய்யாமல் அவளை தூங்கும்படி நிர்பந்திக்கின்றனர்.
களைப்பிலும் பயத்திலும் உறங்கி போகிறாள் மரியா. நடுஇரவில் கண் விழித்து பார்க்கையில் ரோஸியை கடத்தல் காரர்கள் தூக்கி செல்கின்றனர். ரோஸி இறந்து விட்டிருக்கலாம் என்று மரியா அஞ்சுகிறாள். தங்களையும் கொலை செய்து விடுவார்களோ என்று பயந்து போய் மரியாவும் பிளான்காவும் போதை மாத்திரைகளை அள்ளி பையில் போட்டபடி ஓட துவங்குகின்றனர்.
எப்படியோ இருவரும் சேர்ந்து ரோஸியின் சகோதரியின் வீட்டையும் கண்டு பிடிக்கின்றனர். பிளான்கா மரியா செய்தது தவறு என்று சண்டையிடுகிறாள். கடத்தலுக்கு உண்டான பணத்தை கூட பெறாமல் வந்து விட்டோமே என்று கடிந்து கொள்கிறாள். ரோஸியின் சகோதரி வீட்டிற்கும் வர மறுக்கிறாள். உன்னால் தொந்தரவு தான் என்று பிளான்காவை நொந்து விட்டு மரியா மட்டும் ரோஸியின் சகோதரி வீட்டிற்கு சென்று அறிமுகம் செய்து கொள்கிறாள்.
தான் வேலை தேடி அமெரிக்கா வந்ததாகவும் ரோஸிதான் அவளை அனுப்பி வைத்ததாகவும் கூறுகிறாள். தன் தங்கை மீதுள்ள் பாசத்தால் மரியாவிற்கு வேலை ஏற்பாடு செய்வதாகவும் அதுவரை இங்கேயே தங்கி கொள்ளலாம் என்று ரோஸியின் சகோதரியும் அவளது கணவனும் கூறவே மரியா அவர்களுடன் தங்குகிறாள். தனியே செய்வதறியாது தவித்த பிளான்காவும் பின்னர் அங்கேயே அடைக்கலமாகிறாள்.
இருவருக்கும் வேலை ஏற்பாடு செய்வதாய் சொன்ன ரோஸியின் சகோதரி அவர்களை வேலை வாங்கி தரும் ஏஜெண்டிடம் அழைத்து சென்று விட்டு விட்டு சென்று விடுகிறாள். பிளான்காவின் பையிலிருந்த போதை மருந்துகளை அவன் கவனித்து விடுகிறான். அது தவிர நகரில் நடந்த ஒரு முக்கியமான செய்தியையும் சொல்கிறார். போதை மருந்துகளை வயிற்றில் சுமந்து வந்த ஒரு பெண் இறந்து விட்டதாகவும் அவளின் வயிற்றை கிழித்து போதை மருந்துகளை எடுத்து கொண்டு அவளது பிணம் வீச்ப்பட்டதாகவும் தெரிவிக்கவே இருவரும் சில நிமிடம் உறைந்து போகின்றனர்.
ஏஜெண்ட் சந்தேகத்தின் பேரில் இருவரிடமும் கேள்விகள் கேட்கவே அங்கிருந்து வெளியேறுகின்றனர். கடத்தல் காரர்களுக்கு போன் செய்து ரோஸியை பற்றி விசாரிக்கின்றனர். அது மட்டுமில்லாது தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்தால் போதை மருந்துகளை ஒப்ப்படைப்பதாகவும் கூறவே சில நிமிடங்களில் பணத்துடன் வந்து சேர்கின்றனர் கடத்தல்காரர்கள்.
அவர்களிடம் போதை மருந்துகளை கொடுத்து சண்டையிட்டு பணத்தை பெறுகின்றனர் மரியாவும் பிளான்காவும். ரோஸியை பற்றி விசாரிக்கவே அவள் இறந்து விட்டாள் என்று அசட்டையாக சொல்லி விட்டு செல்லவே மீண்டும் ஏஜெண்டிடம் ஒடிப்போய் அனைத்து விபரங்களையும் சொல்கின்றனர். அவர் பதைத்து போகிறார். இருவருக்கும் ஏதாவது வேலை வாங்கி தருவதாக கூறி இந்த விஷயமெல்லாம் ரோஸியின் சகோதரிக்கு தெரியுமா என்று கேட்கவே இருவரும் மவுனமாகின்றனர்.
மரியாவிற்கு உடல் நிலை பாதிக்கிறது. தனியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கிறாள். அவள் குழந்தை ஒரளவு வளந்து விட்டதால் வாராவாரம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சீட்டு எழுதி கொடுக்கிறார் மருத்துவர். ஸ்கேன் செய்த குழந்தையின் படத்தையும் அளிக்கிறாள். நீண்ட நாள் கழித்து அனைத்து துயரங்களையும் மறந்தவளாய் புன் முறுவல் பூக்கிறாள் மரியா.
வீட்டை அடைந்ததும் ரோஸியின் சகோதரியிடம் நடந்தவற்றை சொல்ல நேரம் கிடைக்காது தவிக்கிறாள் மரியா. அதற்குள் ஏஜெண்ட் போன் செய்து அனைத்து விபரங்களையும் தெரிவிக்கவே இருவரையும் அடித்து துரத்தாதக் குறையாய் வீட்டை விட்டு வெளியேற சொல்கிறாள் ரோஸியின் சகோதரி. வாழ்க்கையே வெறுத்து போனவர்களாய் இருவரும் வெளியேறுகின்றனர். மீண்டும் திரும்ப ஊர் போய் சேரலாம் என்றும் முடிவெடுத்து டிக்கெட்டும் பதிவு செய்கின்றனர்.
ரோஸியின் உடல் அவளது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது அறிந்து அவளுக்கு இறுதி மரியாதை செய்ய வருகிறாள் மரியா. அவளது உடலை காண முடியாது அழுகையும் துக்கமும் மரியாவை வாட்டி எடுக்கிறது. ரோஸியின் சகோதரியிடம் சிறிது பணத்தை அளித்து விட்டு விடை பெற்று செல்கிறாள் மரியா.
மரியாவும் பிளான்காவும் விமான நிலையம் அடைகின்றனர். போகிற வழி முழுவதும் தன் கருவில் உள்ள குழந்தையின் ஸ்கேன் செய்த படத்தை பார்த்தபடியே செல்கிறாள் மரியா. தன் குடும்ப நிலை குறித்த வருத்தங்களும் பிறக்க போகும் குழந்தை குறித்த சந்தோஷங்களும் அவளின் மனதில் நிழலாடுகின்றன.
டிக்கெட் பரிசோதனைகள் முடிந்து விமானத்திற்குள் ஏற முற்படுகையில் பிளான்கா முதலில் செல்ல மரியா பின் நோக்கி நகர்ந்து விமானை நிலையத்தை விட்டு வெளியே செல்லுவதாய் நடக்க காட்சிகள் உறைந்து திரைப்படம் முடிகிறது.திரைப்படம் முடிந்ததும் ஏதோ இனம் புரியாத ஒரு சோகம் நம்மையும் ஆட்டுவிக்கிறது.
கொலம்பியாவில் பிறந்த இவர் விளம்பர துறையை விருப்ப பாடமாக பயின்று பின்னர் நடிப்பின் மீது ஏற்பட்ட காதலால் நியூயார்க் நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர். 2004ல் இந்த திரைப்படதிற்காக இயக்குநர் பல புது முகங்களை தேடிய போது 900க்கும் மேற்பட்ட புது முகங்களில் முதலாவதாக தேர்வு பெற்றவர். இயக்குநரின் தேர்வு எவ்வளவு சிறந்தது என்று இத்திரைப்படம் பார்த்ததும் அறிய முடிகிறது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த அருமையான திரைப்படத்தின் இயக்குநர் Joshua Marston. அமெரிக்காவில் பிறந்து சிகாகோ பல்கலைகழகத்தில் அரசியல் வரலாறு பட்டபடிப்பு படித்து பத்திரிகை நிருபராக வாழ்க்கையை துவங்கியவர். இவரும் சினிமாவின் மீது ஏற்பட்ட அதீத காதலால் மீண்டும் கலை இலக்கியம் பயின்று சிறந்த திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று உறுதியுடன் முயன்று இந்த திரைப்படத்தை எழுதியும் இயக்கியும் வெற்றி பெற்றுள்ளார்.
2004ல் உருவான இந்த ஸ்பானிஷ் திரைப்படம் HBO நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த திரைப்படத்திற்கான திரைக்கதையை உருவாக பல போதை மருந்து கடத்தல் குற்றவாளிகளிடம் பேசி அவர்களது அனுபவங்களை அறிந்து கொண்டு இயக்கியுள்ளார்.
வாழ்க்கையின் கன பரிமாணத்தை அதன் அழுத்தம் குறையாமல் சுவாரசியமாகவும் எளிமையாகவும் படைத்திருப்பது ஒரு அதி உன்னத அனுபவமாய் அமைந்த திரைப்படம். மரியாவின் ஆசைகளும் நிராசைகளும் ஏக்கமும் சந்தோஷங்களும் துக்கமும் ஒரு அற்புத பாத்திர படைப்பாய் மிளிர்கிறது.
பெர்லின், சூடான் என்று பல உலக திரைப்பட விழாக்களில் பரிசை அள்ளியதுடன் 30க்கும் மேற்பட்ட உலக விருதுகளை வாரி குவித்துள்ளது.
உலக சினிமா விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
உடனே பார்க்க டிரைலர் இங்கே
42 comments:
நாளை முடித்து விடுகிறேன்.
வேறு ஒரு பதிவரின் பதிவில் நான் படித்து இருக்கேன் தலைவரே. கதை அருமையாக செல்லும்.
ஆகா,
ஒரு வெளிவந்த படத்தினைப் பற்றிய விவரங்களை இவ்வளவு அழகாய் சஸ்பென்சொடு சொல்லியதோடு மட்டுமல்லாமல் தொடரும் போட்டு படபடப்பையும் ஏற்றியிருக்கிறீர்கள். புது முயற்சி மட்டுமல்லாமல் நேர்த்தியையும் இருக்கிறது. வாழ்த்துக்கள் என் அன்பு சூர்யா.
வேலைப்பளு அதிகமாயிருந்ததால் சரிவர படிக்க, இடுகையிட இயலவில்லை சூர்யா... விசாரித்தமைக்கு, உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி. மீதியை படிக்க நாளைக்காய் காத்திருக்கிறேன்.
பிரபாகர்.
very interesting story and write-up.
என்னைய்யா சினிமா விமர்சனத்துக்கே தொடருமா???
பட் இது ரொம்ப நல்ல படம் இந்த போஷன் மட்டும் அயன்ல யூஸ் பண்ணி இரு்ப்பாங்க...
சீக்கிரம் எழுதுங்க சூர்யா இன்டரஸ்டிங்
தொடருமா ?? நீங்களுமா??:))
என்னா அழகு (போட்டோவ சொன்னேன்):)
ஜி கலக்குங்க..:)
ஆஹா . . எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்று . . இதைப் பற்றி நான் இன்னும் சில நாட்களில் எழுத எண்ணியிருந்தேன் தல. . . :--) . . பட்டைய கிளப்பிட்டீங்க . . மிக மிக அருமையான ஒரு கவிதை இப்படம் . .
நிற்க. . இப்படத்தின் பல காட்சிகள் அப்பட்டமாக 'அயன்' படத்தில் ஈயடிச்சான் காப்பி அடிக்கப்பட்டது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் . . இது திருட்டல்லவா . .
நிஜம்மாகவே வர்ணிக்கமுடியாத அழகி தான் போல கதாநாயகி :)
சுவாரசியம்.
தொடர்ச்சியை எதிர்பார்த்து........
இப்படி தொடரும்னு இடைவேளை விட்டா "பாப் கார்ன்- முறுக்கெல்லாம் யார் தர்றது?
படம் பார்த்த உணர்வை தருகிறது.பதிவு கலக்கல்
தல இது எப்ப வந்த படம்...இது போல் அயன் படத்திலும் இருக்கிறதே. நம்ம ஆளுங்க அங்கருந்துதான் எடுத்தாங்களா?
புலவன் புலிகேசி
//நம்ம ஆளுங்க அங்கருந்துதான் எடுத்தாங்களா? //
என்னது காத்திய சுட்டுட்டாங்களா????////
கதை நல்லாயிருக்கு
தொடர்ச்சியை எதிர்பார்த்து........
காத்துஇருக்கிறோம். சீக்கீரம் தொடருங்கள்............
தொடருமா? நடத்துங்க :)
தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் :)
மீதிக் கதைக்காக வெய்ட்டிங்.
அருமையான விமர்சனம்...
மீதியையும் படிக்க ஆவலாய் உள்ளது..
நேரில் படம் பார்த்த ஒரு உணர்வை ஏற்படுத்தி உள்ளது உங்களின் விமர்சனம் . வாழ்த்துக்கள் நண்பரே
விமர்சனம் நல்லா எழுதறிங்க...மீதி கதைக்காக வெயிட்டிங்..
என்னா நம்மள ஃபாலோ பண்றமாதிரி தெரியுது......தொடரும்...
காப்பிரைட் நானு வாங்கிருக்கேன்! சூப்பர் படம்.சிறப்பான விமர்சனம் தல..
இன்னிக்கு முடிக்கலையா ? ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறிங்களேன்னா
காத்திருக்கிறேன்.
இண்டர்மிஷன் இப்படி போட்டுட்டியளே
சீக்கிரம் மாம்ஸ் ...
நன்றி ரோமியா.
நன்றி பிரபாகர். உங்கள் வருகையே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நன்றி சித்ரா.
ஜாக்கி. இது யூஸா..?? அப்பட்ட காப்பின்னு மக்கள் சொல்றாங்க.
நன்றி தேனம்மை.
நன்றி ஷங்கர். சும்மா..
நன்றி நண்பர்களே. மன்னிக்கவும். வேலை மிகுதியால் ஒரு நாள் தாமதமாகிவிட்டது.
அனைவரின் கருத்துகளுக்காக காத்து கிடக்கிறேன்.
இன்னொரு படத்த பார்த்து அப்பட்டமா காப்பி அடிச்சுட்டு , அதே படத்துல மிச்ச பேத்த பத்தி நக்கல் வேற. கே.வி.ஆனந்த குத்தம் சொல்றதா இல்லின்னா சுபாவ சொல்றாதா. ஒங்க பதிவு ரொம்ப நல்ல பகிர்வுன்னா. இந்த படத்தையயும் கண்டிப்பா பாத்துடறேன்.
நல்ல ஒரு திரைப்படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. உங்கள் எழுத்து திரைக்கதையின் டெம்போவை அப்படியே கொண்டுவந்திருக்கிறது.
Thanks for the complete review Surya nice movie
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது வாழ்க்கையை பெரும் கேள்விக் குறியாக்கிவிடுவது பற்றி செய்தியாகவும் இலக்கியமாகவும் சினிமாவாகவும் பார்த்து அதிர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறேன்.நம் நாட்டுச் சூழலோடு நூறு சதவீதம் பொருந்த முடியாத வியாபார உலகம் அது. லத்தின் அமெரிக்க நாடுகள், ஹாங்காங் போன்ற நாடுகளின் இருண்ட வர்த்தக உலகம். நண்பர் ரகு எழுதிய இதே போன்றதொரு படத்தின் இணைப்பை இங்கே தருகிறேன்.
http://krnathan.blogspot.com/2010/02/13-tzameti-french.html
அருமை . . முழுதும் படித்தேன் . . மிகவும் பிடித்தது . . இப்படம் பார்த்த புதிதில், சேண்டினா பின் பைத்தியம் போல் திரிந்ததை நினைத்துப் பார்த்தேன் . .:-) (கனவுல தான் . . ஹீ ஹீ ) . . . ஆனால், அயன் பார்த்தபோது, மண்டை காய்ந்து விட்டேன் . . சூப்பர் !!
நல்ல படம்.நான் எனது ஜப்பானியத் தோழியுடன் மலேசியாவில் பார்த்த ஞாபகம்.உங்க பதிவு படித்ததில் பிடித்திருக்கு.
ஆவலோடு படிக்க தூண்டும் விதத்துல எழுதியிருக்கிங்க.....
நல்லாயிருக்கு!
sir....romba thanks...innum konjam jasthia sollanumna....romba romba thanks
Can you please write your blog in English so that maximum peopel can benefit
Please write your blog in English so that maximum people will benefit
boss... intha kathai namma payapulaiga aataipottu ydutha padama ayan.... aiyo aiyo aiyo aiyo aiyo....
Post a Comment