ஜிரோ (அவன் பெயரே அதுதான்) வளர்ந்து வரும் ஒரு கார் மெக்கானிக். முதலாளிக்கு விசுவாசமான ஊழியன். ஆனால் முதலாளிக்கோ ஏகப்பட்ட கடன் பிரச்சனைகள். மெக்கானிக் ஷெட்டை இழுத்து மூடி விட நினைக்கிறார். பல வருடமாக தன்னிடம் வேலை செய்யும் ஜிரோவை என்ன செய்வது..?? வெளியூரில் வசிக்கும் தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலில் மூத்தவருமான கஜா விடம் அனுப்பி வைக்கிறார்.
ஜிரோவும் வேறு வழியில்லாது தொலை தூர பயணத்துக்கு ஆயத்தமாகி கஜா இருக்கும் ஊருக்கு வந்தடைகிறான். கஜாவும் நண்பரின் சிபாரிசிற்கு இணங்கி ஜிரோவை வேலையில் சேர்த்து கொள்கிறார். ஆனால் கஜா பழைய முதலாளி போல கருமமே கண்ணாயினாரல்ல. நல்ல சொகுசு பார்ட்டி. தனிக்கட்டை வேறு. சதா தண்ணி, சீட்டு என்று கொண்டாங்களுடன் கொஞ்சம் வேலையும் செய்வார்.
அந்த ஊரில் கைதேர்ந்த மெக்கானிக்கான கஜாவை விட்டால் வேறு ஆள் கிடையாது. நண்பர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும் வாடிக்கையாளர்களுக்கு பஞ்சமில்லை.
ஷெட்டின் மாடியிலேயே அவனுக்கு தங்குமிடம் ஒதுக்க படுகிறது. ஆனால் ஜிரோவிற்கு தொழில் மேல் பக்தி. எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறான். கஜாவை குருவாக ஏற்று கொண்டு தொழிலை நன்கு கற்க வேண்டும் என்று பேராவல்.
ஆனால் மாஸ்டர் கஜவோ முதலில் பெண்களை வசியபடுத்தும் கலையையே கற்று கொள்ள வேண்டுமென்கிறார். இல்லாவிட்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது என்று தினமும் அட்வைஸ் வேறு. வேலை கற்று கொள்வதற்காக வந்த இடத்தில் இது என்னடா வம்பா இருக்கே என்று தயங்கி தயங்கி அவர் சொல்லும் ஆலோசனகளே கேட்ட படியே இருக்கிறான்.
கஜாவின் நண்பர் லிபேக். வெளியூரில் சூதாட்ட கிளப்பும் நவீன பாரும் வைத்து இருக்கிறார். கையில் நல்ல சில்லறை. மனைவி பிரான்ஜாவை கண்டு கொள்வதேயில்லை. அடிக்கடி இருவருக்கும் சண்டை வேறு. அன்புக்காக ஏங்கி கிடக்கிறாள் பிரான்ஜா.
பிரான்ஜாவின் கார் அடிக்கடி விபத்தில் சிக்க கஜாவின் ஷெட்டுக்கு வருகிறது. அதை பழுது பார்க்கும் வேலை ஜிரோவிற்கு. இந்த சூழ்நிலையில் ஜிரோவும் பிரான் ஜாவும் நெருங்கி பழகுகிறார்கள். தனது குரு கஜா சொல்லி கொடுத்த ஐடியாக்கள் எல்லாம் ஒர்க் அவுட் ஆகிறது. பிரான்ஜாவும் ஜிரோவின் அன்பில் அடைக்கலமாகிறாள். அடிக்கடி சந்திப்பும் நிகழ்கிறது.
குரோசிய நாட்டு பாப் பாடகி செவரினாவின் தீவிர ரசிகர் கஜா. ஏன்..? பக்தர் என்றே சொல்லலாம். கஜாவிற்கோ நீண்ட நாள் கனவு ஒன்று உண்டு. அதாவது செவரினாவின் இசை கச்சேரியை நேரில் காண வேண்டுமென்பதே. அவளது போஸ்டருக்கு சூடம் கொளுத்தாத குறையாய் தினமும் ஒர்க் ஷாப்பில் வைத்து பூஜித்து வருகிறார்.
கஜாவின் எண்ணப்படியே செவரினாவின் இசை கச்சேரி உள்ளூரில் நடக்க இருப்பதாய் செய்தி வரவே துள்ளி குதிக்கிறார்.கஜா.
இதையறிந்த லிபேக் செரினாவின் மானேஜர் தன் நண்பன் என்றும் எப்படியாவது டிக்கெட் தருவதாய் உறுதியளிக்கிறான். அதை தவிர செரினாவுடன் ஒரு இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்வதாய் உறுதியளிக்கிறான். ஆனால் அதற்கெல்லாம் பிரதிபலனாய் தனது பழைய காரை பத்து பைசா செலவில்லாது புதிய காராக மாற்றி தரவேண்டும் என்பதே நிபந்தனை.
டீலா.. ?? நோ டீலா ..?? என்கிறான் லிபேக்.
ஏற்கனவே பல முறை ரிப்பேர் செயததற்கு பணம் பாக்கி என்று கோபித்து கொள்கிறார் கஜா. கணக்கு எப்ப்பவோ சரியாகி விட்டது என்கிறான் லிபேக். இருவருக்கும் சண்டை முற்றவே நண்பர்கள் தலையிட்டு பஞ்சாயத்து செய்கின்றனர்.
பல நாள் கனவை கைவிட முடியாமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டே
டீல் என்று ஒப்பு கொண்டு அந்த நாளுக்காக காத்திருக்கிறார் கஜா.
காரை பழுது பார்க்கும் பணியும் தொடங்கி விட்டது. அதற்காக லிபேக்கின் மனைவி பிரான்ஜாவும் அடிக்கடி ஒர்க் ஷாப்பிற்கு வருகிறாள். மாடியிலே தனியறையில் இருவரும் பொழுதை கழிக்கினறனர். இந்த விஷயம் அரசல் புரசலாக கஜாவிற்கு தெரிய வருகிறது. லிபேக்கின் மீதுள்ள கடுப்பால் கண்டும் காணாமல் இருக்கிறார்.
ஆனால் லிபேக்கால் ஜிரோவிற்கு ஆபத்து வரலாம் என்று எச்சரிக்கிறார். முன் பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கியையும் அவனிடம் தருகிறார். முதலில் கொஞ்சம் மிரண்டு போகிறான் ஜிரோ. எதற்கும் ஜாக்கிரதையாய் இரு என்று அறிவுரை கூறுகிறார்.
பயத்திலும் ஜிரோ பிரான்ஜா காதல் தொடர்கிறது.
இசைகச்சேரி நடைபெறும் நாளும் வருகிறது. டிப்டாபாக உடையணிந்து நண்பர்களுடன் ஆவலுடன் கச்சேரிக்கு செல்கிறார் கஜா. அளவில்லா மகிழ்ச்சியுடன் தனது கனவு தேவதையை நேரில் கண்டு இசை கச்சேரியை மெய்மறந்து ரசிக்கவும் செய்கிறார்.
மறுநாள் இரவு கஜாவின் ஒர்க் ஷாப்பிற்கே செரினா வர இருப்பதாகவும் அவருடன் டின்னர் முடித்து அவருடன் தங்க இருப்பதாய் கூறவே ஆனந்த கூத்தாடுகிறார் கஜா.
நம்ம ஊரில் ஆயுத பூஜைக்கு அலங்கரிப்பது போல ஒர்க் ஷாப்பை அலங்கரிக்கிறார். எல்லா வித ஏற்பாடுகளையும் கண்ணும் கருத்துமாய் செய்து விட்டு இரவு முழுவதும் காத்திருக்கிறார் கஜா.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடாத குறை தான். விடியற்காலை ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்குகிறாள் ஒரு பெண். அது செவரினா தானா ? கஜாவால் நம்ப முடியவில்லை. . பாதி தூக்கத்திலிருக்கிறார் கஜா. ஆனாலும் தனது கனவு தேவதை வந்ததையெண்ணி உற்சாகத்தில் குதிக்கிறார்.
இருவருக்கும் இனிய இரவாகிறது. பெரு மகிழ்ச்சியில் அமைதியாய் காலையில் காத்திருக்கிறார்.
ஜிரோவை காணவில்லை. விடிந்ததும் வருகிறான். நடந்ததையெல்லாம பெருத்த மகிழ்ச்சியுடன் அவனிடம் கூறுகிறார். I had Rooster's breakfast என்று கூறி அதன் அர்த்ததையும் வெட்கத்துடன் கூறுகிறார் கஜா.
எதற்கும் பதிலோ ஆமோதிப்பா இல்லாமல் மெளனமாய் அமர்ந்திருக்கிறான் ஜிரோ. மெளனத்தின் அர்த்தம் புரியாமல் இரவு எங்கு போனான்.. ஏன் வரவில்லை என்று அவனை கேள்விகளால் துளைத்து எடுக்கிறார் கஜா. நீண்ட நேர மொளனத்திற்கு பிறகு கஜா ஏமாற்றப்பட்ட விஷயத்தை போட்டு உடைக்கிறான் ஜிரோ.
இரவு அவன் பிரான்ஜாவுடன் இருந்ததாகவும் இங்கு வந்தது செவரினாவே இல்லை என்றும் அவளை போலவே தோற்றமளிக்கும் வேறு ஒரு மாடல் அழகி என்றும் கூறுகிறான். இதையெல்லாம் கூறியது பிரான்ஜா என்றும் கூறுகிறான்.
மனம் உடைந்து போய் தனியே அமர்ந்து கொள்கிறார். அந்த நேரம் பார்த்து லிபேக் அங்கு வருகிறான். வந்ததும் ஜிரோவின் கையில் கட்டியிருக்கும் செயினை காண்கிறான். அது பிரான்ஜாவுடையது. அவனுக்கு அனைத்தும் புரிந்து விட்டது.. ஆனால் அது தெரியாமல் லிபேக்கிற்கு சிகரெட்டை நீட்டுகிறான் ஜிரோ.
ஆத்திரத்துடன் லிபேக் ஜிரோவை தாக்க முற்படுகையில் உள்ளேயிருந்து வந்த கஜா லிபேக்கை சுட்டு தள்ளுகிறார் கஜா. அதிர்சியும் வேதனயுடன் கண நேரத்தில் நடந்ததை புரிந்து கொள்ளவும் முடியாமல் திகைத்து போகிறான் ஜிரோ.
கஜா கைதாகி சிறையில் இருக்க பிரான்ஜாவுடன் அவளது மகனையும் சேர்த்து கொண்டு செவ்வனே ஷெட்டை நிர்வகிக்கிறான் ஜிரோ.
ஒரு நாள் சிறையில் சென்று கஜாவை பார்க்கிறான். கஜா தனக்கு பிடித்த ஒயினையும் பழங்களையும் அடுத்த முறை வரும் போது வாங்கி வர சொல்கிறார். தான் மகிழ்ச்சியாய் இருப்பதாய் வெளியில் வரும் வரை ஷெட்டை கவனத்துடன் பார்த்து கொள்ள அறிவுரை கூறுகிறார் கஜா.
இன்னும் அவரை புரிந்து கொள்ள முடியாதவனாய் கஜாவை வியந்து எண்ணியபடியே ஊரை நோக்கி பயணிக்கிறான் ஜிரோ.
கஜாவாக நடித்த Vlado Novak. நடிப்பு மிக மிக யதார்த்தம். நடிப்பு கலையை முறையாக பயின்றவர். மிக்சிறந்த நாடக நடிகர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்தவர். பல வித உணர்ச்சிகளை அத்தனை இயல்புடன் நடித்திருப்பதை எத்தனை பாராட்டினாலும் தகும்.
ஸ்லோவினிய நாட்டு திரைப்படமான இந்த திரைப்படம் வெளிவந்தது 2007.
இந்த நாடு யூகோஸ்லோவியாவிலிருந்து 1992 தான் பிரிந்து தனிநாடாகியது. இந்த நாட்டின் மிகப்பெரிய ஹிட் படங்களுள் ஒன்று. ஐந்து சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.
இத்திரைப்பத்தை இயக்கியிருப்பவர் Marko Naberšnik. 1996முதல் குறும்படங்களை இயக்கி வருபவர். திரைப்பட இயக்கத்தை முறையாக பயின்றவர். 2000ம் ஆண்டு இவர் இயக்கிய With Love என்ற குறும்படம் பல விருதுகளை வென்றது. இவர் இயக்கிய முதல் முழூ நீள திரைப்படம் இது.
சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.
வழக்கப்படி பார்க்க டிரைலர் இங்கே
Friday,Feb26,
Friday,
Feb
26,
Rooster's Breakfast
Labels:
18+ only,
Adult Movie,
Adults Only,
Marko Naberšnik,
Not for Kids,
Rooster's Breakfast,
Slovenian film,
Vlado Novak
|
Estou lendo: Rooster's BreakfastTweet this! | Assine o Feed |
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
TEST.
மிகவும் நேர்த்தியாக கதை சொல்லி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.
மிக நல்ல விமர்சணம் வழமை போல.
நீங்கள் தமிழ் சப் டைட்டில் எழுதலாம் சூர்யா என் போன்றோருக்கு மாற்று மொழி படங்கள் பார்க்க இலகுவாக இருக்கும்.
கொஞ்ச்சம் வேலை இதோ இப்ப வந்துவிடுகிறேன் !
வழமையான நல்ல பகிர்வு. வழக்கப்படி டெஸ்டிலும் பதிவிலும் பாஸ் ஆகிவிட்டிர்கள் நண்பரே
தல எங்கிட்டு இருந்து இந்த மாதிரி படங்களை பிடிக்கிறிங்க...உடனே பார்க்கனும் போல இருக்கு...அப்படியே ஏதாச்சும் டவுன்லோடு லிங்கு இந்தால் கொடுங்களேன் ;)
மற்றோர் பல்ஸான விமர்சனம்... :)
மிக அருமையன பகிர்வு சூர்யா..
நல்ல கதை சொல்லும் முறை உங்களிடம் இருக்கு..
ஜமால் சொன்னபடி சப் டைட்டில் எழுதுங்க ..
நல்லா வரும்..
எங்களுக்கும் பயன்..
ஒரு நல்ல திரைப்படத்தை முன் மொழிந்தமைக்கு மிக்க நன்றிங்கண்ணே..
மிகவும் நேர்த்தியான எழுத்து நடை . மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்தது உங்களின் விமர்சனம் .
கலக்கற தொர..
ப்ளாகரில் டைப் செய்யும்போது எடிட் விண்டோவில் இருந்து செய்யவும். இன்னும் நேர்த்தியாக வரும். தேவை இல்லாத ஸ்பேஸை தவிர்க்கலாம்...
சூர்யா. சினிமா தவிர்த்து வேறும் எழுதுன்னு (நிறைய முறை சொல்லிவிட்டேன்)
நேரம் கிடைத்தால் கூடவே cd கிடைத்தால் பார்த்துவிடுகிறேன் அருமை சூர்யா சார்..
சூர்யா,
அருமையான விமர்சனம். மிகவும் ரசித்தேன். அடிக்கடி வந்து பதிவிடவும்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
நன்றி சித்ரா.
நன்றி ஜமால்.
அதுக்கு சான்ஸ் கிடைத்தால் நிச்சயம் செய்வேன்.
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
நன்றி சங்கர்.
இன்னும் பார்க்கலையா..??
நன்றி வேல்கண்ணன்.
நன்றி கோபிநாத். லிங்க் இருக்கான்னு தெரியலை. இந்த திரைப்படம் ஸ்லோவேனியா திரைப்பட விழாவில் பார்த்தது.
நன்றி டாக்டர் அசோக்.
நலமா..??
நன்றி தேனம்மை.
நன்றி சரவணன்.
நன்றி சங்கர்.
நன்றி செந்தழலாரே.
அவசியம் செய்கிறேன். சீனியர் பிளாக்கர் கருத்துக்கு நன்றி.
நன்றி மணிஜீ.
புனைவு டிரை பண்ணவா..?
கொஞ்சம் டியூஷன் எடுக்கணும் உங்க கிட்ட.. அப்பதான் எதாவது வரும்.
நன்றி கிருஷ்ணா.
நன்றி வெங்கட்.
நல்ல படத்தை பார்த்தோம்
பகிர்விற்கு நன்றி சூர்யா
நல்ல இருக்கு தலைவரே .. எங்க இருந்து இந்தமாதிரியான படங்களை புடிகிரிங்க ??
Post a Comment