இந்த திரைப்படம் கண்டிப்பாக குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. குடும்பத்துடன் காண இயலாது.
இத்திரைப்படம் 1990களில் ஜெர்மனியில் Bernhard Schlink எழுதிய The Reader என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். ஆங்கிலத்தில் 2008 ல் வெளியானது.
Michael Berg புகழ்பெற்ற வழக்கறிஞர். குறிப்பாக போர் குற்றங்களின் பின்னணியில் உள்ள வழக்குகளில் நன்கு அனுபவம் பெற்றவர். ஆனால் அவரது இளமை பருவத்தில் ஏற்பட்ட இனம் புரியாத காதல் வாழ்க்கையை சித்தரிக்கிறது.
தனது வீட்டின் வழியே முன்னேறி செல்லும் டிராம் வண்டியை பார்த்து கொண்டிருக்கும் போது கதை பின்னோக்கி நகருகிறது.
இனி பின்னோக்கி:
15வயதான மைக்கேல் பள்ளியிலிருந்து ஒரு நாள் பாதியில் வீடு திரும்புகிறான். அவனுக்கு உடல் நலமில்லை. நடக்கவும் முடியவில்லை. தட்டு தடுமாறி வரும் போது மயக்கமாக ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொள்கிறான். டிராம் கண்டக்டராக வேலை முடித்து தனது வீடு தேடி வரும் ஹென்னா அவனை தேற்றுகிறாள். அவனை உபசரித்து வீடு வரை துணைக்கு வந்து விட்டு விட்டு போகிறாள். மைக்கேல் மருத்துவ சிகிச்சையில் அவனுக்கு கடுமையான ஜீரம் என்றும் மூன்று மாத கட்டாய ஒய்வு வேண்டும் என்றும் மருத்துவர் கூறி விட்டு செல்கிறார். வீடு, தனிமை, மருத்துவம் என்று மூன்று மாத இடைவெளிக்கு பிறகு மைக்கேல் தேறி பள்ளி செல்கிறான்.
தன்னை உபசரித்த ஹென்னாவை ஒரு நாள் சந்தித்து நன்றி சொல்ல வருகிறான். ஹென்னா அவனை விட வயதில் ஏறக்குறைய இரண்டு மடங்கு மூத்தவள். அவனின் நன்றி உணர்விற்கு மகிழ்ச்சியடைகிறாள். மைக்கேலும் விடை பெற்று செல்கிறாள். ஏனோ மைக்கேலுக்கு அவளை மீண்டும் காண வேண்டும் போலிருக்கிறது. ஒரிரு நாட்கள் அவளை சந்திக்கிறான். அவளும் அவன் மீது அளவற்ற அன்பு கொள்கிறாள். அன்பு அதீத காதலாகவும் மாறுகிறது. இனம் புரியாத ஈர்ப்புடன் பள்ளி முடிந்ததும் ஹென்னாவை காண ஒடோடி வருகிறான்.
இருவரும் விவரிக்க முடியாத அளவில் காமத்தில் ஈடுபடுகின்றனர். அதில் ஈடுபடும் பொதெல்லாம் அவனது படிப்பு பற்றி கேட்கிறாள் ஹென்னா. அவன் ஜெர்மனி,ஸ்பானிஷ், லத்தீன் படிப்பதாக கூறுகிறான் மைக்கேல். அதிலுள்ள இலக்கியத்தையெல்லாம படித்து காட்ட சொல்கிறாள். மைக்கேலும் ஒவ்வொரு நாளும் பல இலக்கியங்களையும், கவிதைகளையும் கதைகளையும் படித்து காட்டுகிறான். அவற்றையெல்லாம் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் சோகமும் கொள்கிறாள். ஒவ்வொரு இலக்கிய வார்த்தைகளையும் உள்வாங்கி கொள்கிறாள். சந்திப்பும், இலக்கிய படிப்பும் அதீத காமமுமாக நாட்கள் கடக்கின்றன.
ஒரு நாள் ஹென்னாவிற்கு பதவி உயர்வு கிடைத்து அவளை அலுவலக பணிக்கு மாற்றுவதாக உயரதிகாரி கூறுகிறாள். ஹென்னா திடிரென்று வீட்டை காலி செய்து விட்டு போய் விடுகிறாள். அவளை காணாத மைக்கேல் சொல்ல முடியாத வேதனையில் தவிக்கிறான். பள்ளி படிப்பு முடிந்து சட்ட கல்லூரியில் சேருகிறான். குற்றவியல் சட்டங்களில் ஆர்வம் ஏற்பட்டு அதில் மேல் படிப்பும் படிக்கிறான் மைக்கேல். பிராக்டிகல் அறிவு இருக்க வேண்டும் என்று கோர்ட் நடைமுறைகளை காண கல்லூரி பேராசிரியர் ஒரு நாள் ஏற்பாடு செய்கிறார்.
வழக்குகளை காண நீதிமன்றம் சென்ற மைக்கேல், அன்றைய வழக்கில் குற்றவாளி கூண்டில் ஹென்னா இருப்பதை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறான். 1944ல் யூத அகதிகள் முகாமில் முன்னூறு யூத பெண்கள் சர்ச்சில் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் ஹென்னா முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்ப்ட்டு இருக்கிறாள். ஹென்னாவுடன் அங்கு பணியில் இருந்த சில பெண்களும் வழக்கில் இருந்தனர். ஆனால் அனைத்து பெண்களும் ஹென்னா அதற்கு முழுக்காரணம் என்றும் அவள் தான் தீயிட்டு கொளுத்த குறிப்பெழுதியதாக குற்றம் சுமத்துகின்றனர். பல வருடங்களுக்கு முன் எழுதிய குறிப்புகள காணமல் போய் விட்டதால் ஹென்னாவின் கையழுத்தை பரிசோதிக்க சொல்கிறார் நீதிபதி. ஹென்னா எதையும் எழுதாமல் குற்றத்தை ஒப்பு கொள்வதாக கூறுகிறாள்.
ஹென்னாவிற்கு ஆயுள் தண்டனையும் மற்ற பெண்களுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கிறார் நீதிபதி. வேதனையுடன் வீடு திரும்புகிறான் மைக்கேல். வருடங்கள் கடக்க மைக்கேலுக்கு திருமணமாகி பெண் குழந்தையும் பிறக்கிறது. மனைவியுடன் மனவேற்றுமையால் விவாகரத்தும் முடிந்து விட மகளுடன் தனியே வசிக்கிறான் மைக்கேல்.
ஹென்னாவுடன் வாசித்து மகிழ்ந்த அதே பழைய இலக்கியங்களை தானே மீண்டும் வாசித்து டேப்ரிகார்டரில் பதிவு செய்து சிறைச்சாலையில் உள்ள ஹென்னாவிற்கு அனுப்பி வைக்கிறான் மைக்கேல். ஹென்னாவும் அளவற்ற மகிழ்ச்சியுடன் அனைத்தையும் தினமும் கேட்கிறாள். மைக்கேல் அனுப்பும் கேசட்டுகளை கேட்டு குழந்தை போல சிறிய சிறிய கடிதங்களை மைக்க்கேலுக்கு அனுப்புகிறாள் ஹென்னா. ஆனால் மைக்கேல் பதில் எழுதுவதோ நேரில் சென்று ஹென்னாவை சந்திப்பதோ இல்லை.ஆனால் ஹென்னாவுடன் பழைய நினைவுகளை அவளுக்கு வாசித்து காண்பித்த புத்தகங்களை போல புரட்டி பார்க்கிறான் மைக்கேல்.
சில மாதங்கள் கழித்து சிறைச்சாலையிலிருந்து மைக்கேலுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. இன்னும் சில நாட்களில் நன்நடத்தை காரணமாக ஹென்னா விடுதலை அடையபோகிறாள் என்றும் அவள் வெளியில் தங்க ஏதாவது ஏற்பாடு செய்யவும் என்று சிறைச்சாலை அதிகாரி கூறுகிறாள். பல வருடங்கள் கழித்து ஹென்னாவை மீண்டும் சிறைச்சாலையில் சந்திக்கிறான் மைக்கேல். தலை நரைத்து,நடை தளர்ந்து, உடல் நலிந்து காணப்படுகிறாள் ஹென்னா. "Have you spent much time thinking about the past?" என்று கேட்கிறான் மைக்கேல். அதற்கு "It doesn't matter what I think. It doesn't matter what I feel. The dead are still dead" என்று பதிலுரைக்கிறாள் ஹென்னா. அடுத்த வாரம் அவள் விடுதலையானதும் தொலை தூரத்தில் அவள் தங்க ஒரு சிறிய இடமும் அவனுக்கு தெரிந்த நண்பரிடம் சிறிய வேலையும் ஏற்பாடு செய்திருப்பதாய் கூறுகிறான் மைக்கேல். பதில் ஏதும் கூறாமல் அமைதியாய் இருக்கிறாள் ஹென்னா.
அடுத்த வாரம் அவள் விடுதலையாகும் நாளில் பூங்கொத்துடன் அவளை காண வருகிறான் மைக்கேல். ஆனால் ஹென்னா சில நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக அறிந்து அதிர்ச்சி கொள்கிறான் மைக்கேல்.
மைக்கேலுக்காக அவள் சிறிய குறிப்பெழுதி இருப்பதாக சிறைச்சாலை அதிகாரி கூறுகிறாள். அதில் தனக்கு பல வருடங்கள் எழுத படிக்க தெரியாதென்றும் அதனாலேயே மைக்கேலை இலக்கியங்களை வாசிக்க கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் பின்னர் சிறை வாழ்க்கையில் மட்டுமே எழுத படிக்க கற்று கொண்டதாகவும் எழுதி இருப்பதை படித்ததும் மைக்கேல் சொல்ல முடியாத வேதனையடைகிறான். அது மட்டுமல்லாது இத்தனை வருட சிறை வாழ்க்கை வேலையில் கிடைத்த தொகையெல்லாம் சேமித்து ஒரு சிறு தேநீர் டப்பாவில் சேர்த்து வைத்திருப்பதையும் அதை சர்ச் எரிப்பில் இறக்காமல் உயிர் பிழைத்த இலியானா என்ற பெண்ணிடம் அளித்து விடுவதாக எழுதி இருக்கிறாள். இலியானா தற்போது அமெரிக்காவில் வாழ்வதை அறிந்த மைக்கேல் அமெரிக்காவில் அவளை சந்தித்து நடந்த அனைத்தையும் கூறுகிறான். அந்த தொகையை படிப்பறிவில்லாத யூத மக்களின் கல்வி செலவுக்காக பயன்படுத்த வும் யோசனை கூறுகிறான். இலியானாவும் சம்மதித்து ஹென்னா பெயரில் ஒரு அறக்கட்டளை துவங்கி அப்படியே செய்வதாய் உறுதியளிக்கிறாள். அந்த தேநீர் டப்பாவை மட்டும் தன் தாயின் நினைவாக பாதுகாக்க விரும்புவதாய் கூறுகிறாள் இலியானா.
எப்போதும் ஆச்சரியங்களை விரும்புவதாக கூறும் தனது ஆறு வயது மகள் ஜீலியாவுடன் ஹென்னாவின் கல்லறைக்கு சென்று நினைவஞ்சலி செலுத்தி விட்டு ஆச்சரியங்கள் நிரம்பிய ஹென்னாவின் வாழ்க்கையை அவளுக்கு சொல்ல ஆரம்பிப்பதாய் திரைப்படம் நிறைவு பெறுகிறது.
இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Stephen Daldry என்ற ஹாலிவுட் இயக்குநர். பல சர்வேத விருதுகளை வென்றவர். மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். மிக சிக்கலான கதையை திறமையாக கையாண்டு அருமையாக இயக்கியிருக்கிறார்.
மைக்கேலாக நடித்திருப்பது Ralph Fiennes. நடிப்பில் முதிர்ச்சியும் அனுபவமும் பெற்றவராக அமைதியாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹென்னாவாக நடித்திருப்பது பிரபல ஹாலிவுட் நடிகை Kate Winslet. நடு வயதில் காதலிலும் காமத்திலும் துள்ளும் இளமையுடனும் அதே நேரத்தில் வயதான வேடத்தில் அமைதியிடனும் நடிப்பின் உணர்ச்சி குவியல் என்றால் மிகையில்லை. இத்திரைப்படத்தில் நடித்ததற்காக பல சர்வதேச விருதுகளுடன் ஆஸ்கர் விருதினையும் பெற்றிருக்கிறார்.
சிறந்த திரைக்கதை, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு என்று இருபதுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வாரி குவித்த திரைப்படம் The Reader
சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம பாருங்கள்.
உடனே பார்க்க டிரைலர் இங்கே
டிஸ்கி: உலக சினிமா பதிவுகள் தொடரும்.

43 comments:
அண்ணா வாங்க செளக்கியமா.. ரொம்ப நல்ல படம்னா இது. நல்லா எழுதிருக்கீங்க :)
Welcome Back!!!
எப்படி இருக்கீங்க?
Very nice review!!!
U too ?
:((
நன்றி கண்ணன். நலம். I AM BACK..
நன்றி சித்ரா. நலம். நல்மா..?
தல,
பார்த்து எவ்ளோ நாளாச்சு?
welcome Back! :))
yes. me too. Cool.
தல,
பார்த்து எவ்ளோ நாளாச்சு?
welcome Back! :))
ஷ்ங்கர் நலமா..?
நன்றி.
நல்லா இருக்கு பாஸ்! ரொம்ப நல்ல படம்! அதிலும் குறிப்பாக kate winslet இன் நடிப்பு...குறிப்பாக ட்ராமில் வேலை செய்வதால் ஏற்படும் இயல்பான கால்களை அகல வைத்து அவர் நடக்கும் நடை...! இதத்தான் காரெக்ட்டர் ஆ வாழுறதுன்னு சொல்வாங்க..நம்மாளுங்களும் சொல்வாங்க..! :)
வாழ்த்துக்கள்!!
சூர்யா நீயும் பிரபல பதிவாயிட்ட.. உனக்கு மைனஸ் குத்து இருக்காங்க... வாழ்வுதான்...
நன்றி ஜீ. அருமையான நடிப்பு
அன்பின் ஜாக்கி, பிரபலமாக எனக்கு எந்த அவசியமும் இல்லை.
தொடர்சியான பயணங்கள், அலுவலக நெருக்கடிகள், குடும்ப இழப்புகள், சில பல பிரச்சனைகளால் பல மாதங்களாக எழுத முடியவில்லை.
கடந்த ஒரிரு வாரத்தில் 15 உலக சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சற்று இளைப்பாரவும் நண்பர்களுடன் பகிரவும் மீண்டும் எழுத வந்தேன்.
I AM NOT THE BEST.. BUT NOT LIKE THE REST..
// டிஸ்கி: உலக சினிமா பதிவுகள் தொடரும். //
இது ரொம்ப நல்லா இருக்கு தல... வெல்கம் பேக்...
நன்றி சுகுமார்.
நல்லா எழுதிருக்கீங்க...
Welcome back... How r u anna?
நன்றி குமார். நலமே.
நான் எழுதணும்ன்னு நினைச்சிருந்தேன். நீங்க முடிச்சிட்டீங்க..!
நன்றிங்கண்ணே..!
படம் இப்படியிருக்கும்னு நினைச்சு நான் டிவிடியை வாங்கலை. கேன் வின்ஸ்லெட்டை பார்க்கலாமேன்னு வாங்கிட்டு வந்தேன். ஆனால் படம் இப்படி சோகத்தைப் பிழிஞ்செடுத்திருச்சு..!
இந்த படம் பார்த்தேன்.
அளவுக்கு அதிகமான படுக்கையறை காட்சிகள் இருப்பதாக தோன்றுகிறது.
ஓவர்ஆல் படம் சூப்பர்.
அடேயப்பா .. எவ்வளவு நாளாச்சு .. மிக நல்ல பதிவு சூ ர் யா .. வாழ்த்துகள்
கண்டிப்பாக பார்த்து விடுகிறேன். உடல் நிலையும் கவனித்து கொள்க ..
சூர்யா..எப்படியிருக்கீங்க..
என்ன ஆச்சு.விவரமாய் மின்னஞ்சல் செய்யவும்
sowmyatheatres@gmail.com
அற்புதமான படம்.ஆரம்பத்தில் கேடி வின்ச்லேட்டின் ஆடையற்ற உடலுக்காகத்தான் இந்தப் படத்தின் டிவிடியை வாங்கினேன்.ஆனால் மெல்ல அவரது சிறை மற்றும் நீதிமன்றக் காட்சிகளில் அவர் நடிப்பைப் பார்த்து அரண்டு போனேன்.இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும் நடந்த போர்க் குற்ற விசாரணைகளில் நிறைய பேர் இப்படித்தான் சொன்னார்கள்.''எங்களுக்கு உத்தரவிடப் பட்டதைச் செய்தோம்'என்று..இது சர்ச்சையாகி பெரிதாக விவாதிக்கப் பட்டது.ராணுவம் போன்றவற்றில் வேலை பார்ப்பவர்க்கு இந்த அறச் சிக்கல் நேர்ந்து கொண்டே இருக்கும் .இல்லையா..இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் நீதிமன்றத்தில் தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று அவள் உண்மையைச் சொல்லியிருந்தால் அவர் இருபது வருடம் சிறையில் கழித்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதே..அதற்கு வெட்கி அவர் மிகப் பெரிய தண்டனையை ஏற்றுக் கொள்கிறார்..இது நாவலாய் வந்தது.உண்மைக் கதை என்றும் சொல்கிறார்கள்.நல்ல பதிவு.
ஆமாம் சரவணன். ஆரம்பத்தில் காமமாக ஆரம்பித்து கவிதையாய் முடிகிறது.
அன்பரசன், படம் பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
நன்றி வேல்கண்ணன். உரையாடலுக்கும் நன்றி.
நன்றி டிவிஆர் சார். இப்போது நலமாய் இருக்கிறேன். விரைவில் சந்திக்கிறேன்.
நன்றி போகன். உணவகத்தில் அவள் மெனு கார்ட்டை பார்த்ததும் சிறிது கோவம் கொள்வாள். அவளுக்கு படிக்க தெரியாது என்று சொல்லாமல் சொல்லியிருக்கும் காட்சி அற்புதம். அனைத்தையும் எழுதினால் பதிவு நீண்டு விடும் என்று சுருக்கி விட்டேன். ஒவ்வொரு காட்சியும் கவிதையாய் இருக்கிறது.
நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி
// டிஸ்கி: உலக சினிமா பதிவுகள் தொடரும் //
ம்ஹூம். ஷூட்டுங் முடிஞ்சு படம் ரெடியாயிருச்சு. இனி நீங்க ஃப்ரீன்னு சொல்லுங்க. டோலிவுட்டில் ஜொலிக்க வாழ்த்துக்கள்ணே.
யாய்ய்ய்ய்... எங்கண்ணன் சூர்யா பதிவெழுத ஆரம்பிச்சிட்டார்யா... இனி ஒரு பய விமர்சனம் எழுதக்கூடாது ... யாராவது எழுதினீங்க... பட்டா சீவிருவோம்ல.. முக்கியமா அந்த வெறுந்தேள் வெங்காயம்... :-)
- பட்டர்ஃப்ளை சூர்யா ரசிகப் பேரவை - செவ்வாய் கிரகம்
jokes apart, வெல்கம் பேக் ... இனி அடிக்கடி பதிவுகளைப் போடுங்க.. பின்னலாம் !!
சூர்யா
நல்ல படத்துக்கு அருமையாக எழுதி நோஸ்டால்ஜியாவை கிளறிவிட்டுட்டீங்க,இனி உலகசினிமா குறித்து அடிக்கடி எழுதவேண்டும்,என்பதே எங்கள் அவா.
வாங்க தல
ரொம்ப நல்ல படம்
வழக்கம்போல விமர்சனமும் அருமை :-)
வர்ர டிசம்பர் 13, சன்னைல இருப்பீங்கதானே ? மீட் பண்ணலாம்.. சாரு ஃபன்ஷன்ல.. போன தடவை, ரெண்டு பேரும் அங்க இருந்தும், பாக்க முடியலை.. இந்த முறை, பட்டையைக் கிளப்பலாம்..
hi sir, i am new to blogger world.. how can i get this kind of film..!
ur writting and exploser is very super..
jeba..
jebamail.blogspot.com
நன்றி மரா.
நன்றி கருந்தேள். டிசம்பர் மாத ஷெட்யூல் இன்னும் ரெடியாகவில்லை. :))))))))))))
கண்டிப்பா இருக்கேன்.. மீட் பண்ணலாம். அதென்ன ..சாரு புத்தகம் வெளியிட்டாதான் சென்னைக்கு வருவீங்களா..?
நன்றி கார்த்திக்.
Thanx Jebas. ஒரு தீரா தேடல் தான்.
வாங்கண்ணா, வெல்கம் நல்ல படத்தோடதான் ஆரம்பிச்சிருக்கிங்க... ரைட்டு, இன்னும் பாக்காத படம் சொல்லுங்க :-)
நன்றி முரளி. கோவா பயணக்கட்டுரை அருமை.. வெயிட்டிங்....
nice review. the trailer was very effective too. song reminds me of Dr Zhivago (Rachmaninoff??) and the frames moving at teh speed of heartbeat... interesting and convincing...
Look forward to your recommendations.
shuba
super anna.... nice to read this post and have to watch this movie soon..... keep writing and you are rocking!!!!

Post a Comment